பாதுகாப்பு அமைச்சகம்

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

Posted On: 19 NOV 2020 6:53PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்தின் உரைகள் அடங்கிய குடியரசின் நெறிமுறை பகுதி-3  (The Republican Ethic Volume III) மற்றும் ஜனநாயகத்தின் இசை (Loktantra Ke Swar) என்ற புத்தகத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவரின் உரைகளைக் கொண்டுள்ள இந்த புத்தகம் பணி, குண நலன் மற்றும் மதிப்புகள் குறித்த அவரது விரிவான பார்வையை விளக்குகிறது என்று கூறினார். குடியரசுத் தலைவரின் உரையில் இந்திய மாண்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில்  ஓர் அங்கமாக இந்த மாண்புகள் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.

சமகால இந்தியாவை புரிந்து கொள்ளும் வகையில் ஓர் விலைமதிப்பற்ற குறிப்பேடாக இந்த உரைகள் அமையும் என்று அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த புத்தகத்தின் மின்பதிப்பை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில்  இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674108

**********************


(Release ID: 1674157) Visitor Counter : 120