புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ரீ-இன்வெஸ்ட்-2020: நவம்பர் 26 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்

Posted On: 19 NOV 2020 4:07PM by PIB Chennai

மூன்றாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டுக் கூட்டம் மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸ்ட்-2020) இம்மாதம் 26 ஆம் தேதியன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்.

இங்கிலாந்து தொழில், எரிசக்தி மற்றும் தொழில் யுக்தி செயலாளர், டென்மார்க் எரிசக்தி, பயன்பாடுகள் மற்றும் பருவநிலை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்த தகவல்களை அளித்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங், 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அடைந்த வெற்றியின் தொடர்ச்சியாக மூன்றாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டுக் கூட்டமும், கண்காட்சியும் இந்த வருடம் நடத்தப்படுவதாகக் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கான சர்வதேச களத்தை இந்த நிகழ்வு வழங்குமென்றும், இத்துறையில் இந்தியா கொண்டுள்ள உறுதியை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் மூன்றாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டுக் கூட்டம் மற்றும் கண்காட்சி அமையுமென்றும் அவர் கூறினார்.

தனது எரிசக்தி தேவைகளை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்து கொள்வதை படிப்படியாக அதிகரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674019

 

**********************(Release ID: 1674041) Visitor Counter : 212