பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப் படையின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் வி ஆர் சவுத்ரி ஜம்மு பயணம்
Posted On:
18 NOV 2020 8:50PM by PIB Chennai
இந்திய விமானப் படையின் மேற்கு ஏர் கமாண்டின் தலைமை அதிகாரியான ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி ஏவிஎஸ்எம் வி எம், ஜம்முவில் உள்ள முன்கள விமான தளத்தை 2020 நவம்பர் 18 அன்று பார்வையிட்டார்.
ஜம்முவுக்கு அவர் வந்தடைந்தவுடன், ஜம்மு விமானப் படை தளத்தின் தலைமை அதிகாரியான ஏர் கமோடோர் அஜய் சிங் பத்தானியா விஎஸ்எம் அவரை வரவேற்றார்.
பின்னர், அத்தளத்தின் தயார் நிலையைப் பற்றியும், வழங்கப்பட்ட பணிகளை செய்து முடிப்பதற்கான செயல்திறனைப் பற்றியும் அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
விமானப் படை வீரர்களுடன் உரையாடிய ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி, அவர்களின் முயற்சிகளுக்காக பாராட்டுதல்களை தெரிவித்ததோடு, தொடர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றுமாறுக் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673861
**********************
(Release ID: 1673874)
Visitor Counter : 150