சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கைகளை 2025-க்குள் காச நோயை ஒழிக்கப் மறுபயன்பாடு செய்து கொள்ளலாம்: அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்
प्रविष्टि तिथि:
18 NOV 2020 8:20PM by PIB Chennai
காச நோய் தடுப்பு கூட்டுக் குழுவின் 33-வது கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
நெருக்கடியை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் யுக்தி குறித்து பேசிய அவர், "சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காச நோய் ஒழிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கான வாய்ப்பை கொவிட்-19 நமக்கு வழங்கியுள்ளது," என்றார்.
கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கைகளை 2025-க்குள் காச நோயை ஒழிப்பதற்காக மறுபயன்பாடு செய்து கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.
"காசநோய் ஒழிப்புக்காக, அதற்கெதிரான மக்கள் இயக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். சிந்தனை சார்ந்த தலைமை, யுக்தியுடன் கூடிய நடவடிக்கைகள், மாற்றங்களை உண்டாக்கக் கூடிய சமூக தொழில்முனைதல், சக்தி வாய்ந்த சமூக மற்றும் அரசியல் உறுதியுடன் இதை செயல்படுத்தலாம்," என்று அவர் கூறினார்.
தொற்று நோய்களுக்கெதிரானப் போரை கொவிட்-19 பல வருடங்கள் பின்னோக்கி தள்ளிவிட்டதை ஒத்துக் கொண்ட அமைச்சர், அதே சமயம், பெருந்தொற்றை தடுப்பதற்காக இந்தியா எடுத்த முயற்சிகளையும் பட்டியலிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673854
**********************
(रिलीज़ आईडी: 1673871)
आगंतुक पटल : 273