பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா, இந்தோனேஷியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இணைய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி
प्रविष्टि तिथि:
18 NOV 2020 5:57PM by PIB Chennai
இந்தியா, இந்தோனேஷியா நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இணைய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித்துறை இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஏற்றுமதியை அதிகரித்து, அதன் வாயிலாக ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் ஏற்றுமதி செய்து இலக்கை எட்டும் நோக்கத்தில் நட்பு அயல் நாடுகளுடன் நடத்தப்படும் இணைய கருத்தரங்குத் தொடரின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த இணைய கருத்தரங்கில் கலந்துகொண்டு ராணுவத் துறையை நவீன மயமாக்கி வாய்ப்புகளை ஏற்படுத்துவது, உள்நாட்டு ராணுவ தயாரிப்புகளை ஊக்குவிப்பது முதலியவை தொடர்பாகப் பேசினார்கள். 150-க்கும் மேற்பட்டோர் இந்த இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் காணொலி வாயிலாக இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673769
**********************
(रिलीज़ आईडी: 1673853)
आगंतुक पटल : 205