எஃகுத்துறை அமைச்சகம்

சுரங்கத் துறையில் அதிக அளவில் கொள்கை சீர்திருத்தங்கள்: மத்திய அமைச்சர் பெருமிதம்

Posted On: 18 NOV 2020 3:01PM by PIB Chennai

கடந்த ஆறு ஆண்டுகளில்  சுரங்கத் துறையில் அதிக அளவிலான கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுமுன்னுதாரண மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளதாக மத்திய எஃகுபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்பஞ்சாப் ஹரியானா டில்லி வர்த்தகக் கூட்டமைப்பு இன்று ஏற்பாடு செய்திருந்த தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்நாட்டின் இயற்கை வளங்கள் பொதுமக்களின் உடைமை என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர்இயற்கை வளங்களைக் கண்டு கையாள புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்  என்று வலியுறுத்தினார்.

நிலக்கரிஇரும்புத்தாதுபாக்சைட்மாங்கனீஸ் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களும் முறையாகப் பயன்படுத்தப்பட்டுவெளிப்படையான முறையில் ஏலம் விடப்பட்டு வருவாய் ஈட்டப்பட வேண்டும் என்று பிரதமர் தொலைநோக்கு பார்வை கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்இதற்கான வழிமுறைகளை எளிமையானதாகவும் சுலபமானதாகவும் மாற்றுவதே தற்போது சவாலாக உள்ளதாக அவர் தெரிவித்தார்உறுதித் தன்மையையும் லாப நோக்கையும் கருத்தில் கொண்டே சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கூறிய அவர் இவற்றைக் கருத்தில் கொண்டே கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசின் பல்வேறு துறைகள் இதில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் உலக அளவில் உற்பத்தி மையமாகவும் இந்தியா உயர முயன்று வருவதால் இந்தத் துறை குறித்த முழுமையான பார்வை அவசியம் என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673713

*******


(Release ID: 1673740) Visitor Counter : 156