அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் ஒரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 17 NOV 2020 8:22PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா-2020-வின் முன்னோட்ட நிகழ்ச்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று துவக்கி வைத்தார்.

காணொலி மூலம் நடக்கவுள்ள இந்த வருடத்தின்  இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை முன்னிட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு கூறுகளைக் குறித்து 41 நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

தற்போதைய பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துரைக்கும். இந்திய அறிவியலின் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், தூய்மையான காற்று, எரிசக்தி, கழிவு மற்றும் சுகாதாரம், பல்லுயிரியல் மற்றும் அறிவியல் சாதுரியம் ஆகியவை இந்த வருட அறிவியல் திருவிழாவின் சில மையக்கருக்கள் ஆகும்.

முன்னோட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளால் ஒரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673515

------  


(Release ID: 1673598) Visitor Counter : 229