எரிசக்தி அமைச்சகம்

நாட்டின் முதல் ஒருங்கிணைப்பு எரிசக்தி திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 17 NOV 2020 6:35PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகம் மற்றும் கோவா மாநிலத்தின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இயங்கும் எரிசக்தி ஆற்றல் சேவை நிறுவனமும், கோவா அரசும் நாட்டின் முதல் ஒருங்கிணைப்பு திட்டத்தை அம்மாநிலத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர் கே சிங், கோவா மாநிலத்தின் எரிசக்தி அமைச்சர் மற்றும் மத்திய எரிசக்தித் துறை செயலாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் திரு ஆர் கே சிங், புதிய பசுமைப் புரட்சியின் தொடக்கமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது என்று கூறினார். எரிசக்தித் துறை, குறிப்பாக மின்சக்தித் துறை, எதிர்பாராத மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஊரக பொருளாதாரத்தை ஊக்குவிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்கும் முயற்சியின் மூலம் நுகர்வோர் அதிக அளவில் பயனடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673497

----



(Release ID: 1673557) Visitor Counter : 195