குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி இந்தியாவில் நான்காவது நாளாக ரூபாய் ஒரு கோடியைத் தாண்டியது ஒருநாள் விற்பனை

Posted On: 16 NOV 2020 3:43PM by PIB Chennai

புதுதில்லியின் கனாட் பிளேஸில் உள்ள காதி இந்தியா ஸ்தாபனத்தில் 40 நாட்களில் நான்காவது முறையாக பொருட்களின் விற்பனை ஒரு நாளில் ரூபாய் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இங்கு ஒரே நாளில் ரூபாய் 1.11 கோடிக்கு நிகழ்ந்த விற்பனை இந்த ஆண்டின் அதிகபட்ச ஒருநாள் விற்பனையாக சாதனை படைத்துள்ளது. பொது முடக்கத்திற்குப் பிறகு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது முதல் காந்தி ஜெயந்தி அன்றும் கடந்த அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாக இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி ரூபாய் 1.27 கோடியாக நடைபெற்ற விற்பனையே இதுவரை ஒரு நாளின் அதிக விற்பனையாக உள்ளது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினை குமார் சக்சேனா இந்த விற்பனை குறித்து கூறுகையில், சுதேசி குறிப்பாக காதி பொருட்களை ஊக்கப்படுத்துமாறு பிரதமர் அண்மைக்காலங்களில் கேட்டுக்கொண்டுள்ளதை அடுத்து விற்பனை பெருமளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார். பெருந் தொற்றையும் பொருட்படுத்தாமல் காதி கலைஞர்கள் தங்களது உற்பத்தி நடவடிக்கையை முழு வீச்சில் செயல்படுத்தி, பொது மக்களும் அதற்கு நல்ல வரவேற்பு தந்துள்ளதாக அவர்  குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673167

-----



(Release ID: 1673269) Visitor Counter : 155