உள்துறை அமைச்சகம்
உ.பி.யில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான சேவைகளை வழங்க, தில்லி பதிவு அலுவலகத்துக்கு(எப்ஆர்ஆர்ஓ) அதிகாரம் : மத்திய அரசு முடிவு
Posted On:
11 NOV 2020 7:29PM by PIB Chennai
உ.பி.யில் வசிக்கும் வெளிநாட்டினர், தில்லியில் உள்ள பதிவு அலுவலகத்தில் தங்களுக்கான சேவைகளை பெறும் விதத்தில், அதிகார வரம்பை மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
வெளிநாட்டு பயணிகள் இந்தியாவில் தங்குவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மேலும் ஒரு நடவடிக்கையாக, உத்தரப் பிரதேசத்தின் கவுதம் புத்தா நகர், மற்றும் காசியாபாத் மாவட்டங்களில் வசிக்கும் வெளிநாட்டினர் தில்லியில் உள்ள பதிவு அலுவலகத்தில் தங்களுக்கான சேவைகளை பெறும் விதித்தில் அதிகார வரம்பை மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இது தேசிய தலைநகர் மண்டலத்தில் வசிக்கும்(என்சிஆர்) வசிக்கும் வெளிநாட்டினருக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவர்கள் தங்களின் விண்ணப்பங்களை லக்னோவில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் அளித்து வந்தனர். இது வெளிநாட்டினருக்கு சிரமமாக இருந்ததால், அவர்கள் தில்லியில் உள்ள பதிவு அலுவலகத்தில் விசா உட்பட இதர சேவைகளை பெறும் விதத்தில் அதிகார வரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, ராஜஸ்தானில் உள்ள வெளிநாட்டினர் ஏற்கனவே தில்லி பதிவு அலுவலகத்தில் தங்கள் சேவைகளை பெற்று வருகின்றனர்.
மேலும், கேரளாவில் உள்ள வெளிநாட்டினரின் வசதிக்காக சில மாவட்டங்களுக்கான அதிகார வரம்பை வரையறுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகியவை கோழிக்கோட்டில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகார வரம்புக்குள் வரும். ஆழம்புழா, எர்ணாகுளம், கோட்டயம், பாலக்காடு, திருச்சூர் லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகியவை கொச்சியில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகார வரம்புக்குள் வரும். கொல்லம், பத்தனம் திட்டா, திருவனந்தபுரம் ஆகியவை திருவனந்தபுரத்தில் உள்ள வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகார வரம்புக்குள் வரும். இது கேரளா மற்றும் லட்சத்தீவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு உதவியாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672029
-----
(Release ID: 1672077)
Visitor Counter : 190