விவசாயத்துறை அமைச்சகம்
வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக அனைத்து துறைகளும் பாடுபடுகின்றன: வேளாண் அமைச்சர் திரு தோமர்
Posted On:
11 NOV 2020 5:13PM by PIB Chennai
'கிவி பழத்துக்கான மதிப்பு சங்கிலியை உருவாக்குதல் - பண்ணை முதல் பண்டம் வரை' (‘Value Chain Creation for Kiwi fruit – Farm to Fork’) என்னும் தலைப்பிலான காணொலிக் கூட்டத்தை நாகாலாந்து மத்திய தோட்டக்கலை நிறுவனத்துடன் இணைந்து, மத்திய வேளாண் அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்தது.
இந்தப் பழத்தின் அதிகளவு வர்த்தக சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமை வகித்தார். வேளாண் துறை இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ருபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் செயலாளர், அமைச்சகத்தின் இதர அலுவலர்கள் மற்றும் நாகாலாந்து அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு தோமர், கடுமையான நிலப்பரப்பின் காரணமாக ஒட்டுமொத்த வடகிழக்குப் பிராந்தியமும் பின்தங்கி இருப்பதாகவும், அப்பகுதியின் வளர்ச்சிக்காக அனைத்து அமைச்சகங்களும் பாடுபடுகின்றன எனவும் தெரிவித்தார்.
இந்த இடைவெளியை சரி செய்ய வேண்டுமென்றால், பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தின் படி அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பதன் மூலமும், நிலையான கொள்கை திட்டமிடுதல் மூலமும் மட்டுமே முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இமாலய தட்பவெட்ப சூழ்நிலை கிவி உற்பத்திக்கு ஏற்ற வகையில் உள்ளதாகவும், அதிக விளைச்சல் தரும் வகைகளை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கடுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவின் மூலம், கிவி பயிரிடுதல் இமயமலையில் இருந்து நீலகிரி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக திரு தோமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671949
**********************
(Release ID: 1671987)
Visitor Counter : 193