சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஐடிஏடி கட்டாக் கிளையின் அலுவலகம், குடியிருப்பு வளாகம் : பிரதமர் திறந்து வைக்கிறார்

Posted On: 10 NOV 2020 2:57PM by PIB Chennai

வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்(ஐடிஏடி) கட்டாக் கிளை அலுவலகத்தையும், குடியிருப்பு வளாகத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மாலை திறந்து வைக்கிறார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில்நவீன தொழில்நுட்பத்துடன்  கட்டப்பட்ட ஐடிஏடி அலுவலகத்தையும், குடியிருப்பு வளாகத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி, நவம்பர் 11ம் தேதி மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கிறார்இந்நிகழ்ச்சியில் ஐடிஏடி பற்றிய சிறு புத்தகமும், ‘நேரடி வரியில் கடந்த 2014ம் ஆண்டு முதல் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பிலான -புத்தகமும் வெளியிடப்படுகின்றன.

காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஒடிசா முதல்வர் திரு நவீன் பட்நாயக், ஒடிசா தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐடிஏடி தலைவர் நீதிபதி பி.பி.பாட், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் திரு பி.சி.மோடி, ஐடிஏடி துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஐடிஏடி தலைவர் நீதிபதி பி.பி.பாட், இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

ஐடிஏடி கட்டாக் கிளை, 1970ம் ஆண்டிலிருந்து 50 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, இந்த வளாக திறப்பு, ஐடிஏடி கட்டாக் கிளைக்கு நீதியை நிலைநாட்டுவதில் உதவியாக இருக்கும். புதிய கட்டிடத்தில் உள்ள -நீதிமன்ற வசதி மூலம், ஐடிஏடி கட்டாக் கிளை, கொல்கத்தா அமர்வில் உள்ள மேல் முறையீட்டு மனுக்களையும் விசாரிக்க முடியும். கொல்கத்தா மண்டலத்தில் உள்ள அலுவலகம், ராஞ்சி, பாட்னா, குவஹாதி ஆகிய இடங்களில் உள்ள ஐடிஏடி அலுவலகங்கள் போல் செயல்படாமல் உள்ளது

ஐடிஏடி கட்டாக் கிளை கடந்த 1970ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுஇதற்கு தற்போது கட்டாக் நகரில், 1.60 ஏக்கரில் நவீன தொழில்நுட்பத்துடன் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொவிட்  முடக்க காலத்தில், நாடு முழுவதும் உள்ள ஐடிஏடி அமர்வுகளில், மெய்நிகர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு விசாரணைகள் நடந்தன. 7251 வழக்குகளை ஐடிஏடி முடித்து வைத்ததுதொழில்நுட்பத்தை ஐடிஏடி அதிகம் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்குகிறது. மனுக்களை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யும் வசதியும் தயார் நிலையில் உள்ளது. தீர்ப்பாயத்தின் அனைத்து நடைமுறைகளும் டிஜிட்டல் மயமாகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671695

-----(Release ID: 1671707) Visitor Counter : 221