இந்திய போட்டிகள் ஆணையம்

ஆட்டோமொபைல் துறையில் போட்டி விஷயங்கள் பிரிக்ஸ் போட்டி முகமைகளுக்கான இணைய பயிற்சி முகாம் இந்திய போட்டி ஆணையம் ஒருங்கிணைத்தது

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2020 7:09PM by PIB Chennai

ஆட்டோமொபைல் துறையில் போட்டி விஷயங்கள் குறித்த பிரிக்ஸ் போட்டி முகமைகளுக்கான இணைய வழியிலான பயிற்சி முகாமை இந்திய போட்டிகள் ஆணையம் இரண்டு நாட்கள் நடத்தியது.

நவம்பர் 5,6 என இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தென் ஆப்ரிக்கா போட்டி ஆணையத்துடன் இணைந்து, ஆட்டோமொபைல் பணிக்குழுவின் துணை தலைமையில் இந்திய போட்டிகள் ஆணையம் இதனை நடத்தியது.

போட்டிக்குழுவின் உறுப்பினர்களான திருமதி சங்கீதா வர்மா, திரு பகவத் சிங் பிஷ்னோய் ஆகியோர் முன்னிலையில் இந்திய போட்டி ஆணையத் தலைவர் திரு.அசோக் குமார் குப்தா இந்த பயிற்சி முகாமைத்  தொடங்கி வைத்தார்.  பிரிக்ஸ் போட்டி முகமைகளின் மூத்த அதிகாரிகள் இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671041

**********************


(வெளியீட்டு அடையாள எண்: 1671102) வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Punjabi