சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது: மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்
प्रविष्टि तिथि:
06 NOV 2020 4:42PM by PIB Chennai
காற்று மாசைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உறுதியுடன் மேற்கொண்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புனேவைச் சேர்ந்த பிரஜ் டெக்னாலஜிஸ் உருவாக்கியுள்ள
உயிரித் தொகுதியிலிருந்து உயிரிவாயுவை உற்பத்தி செய்யும் நாட்டின் முதல் செயல் விளக்க திட்டத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து பேசுகையில், மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இதனைத் தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்கள், அனல் மின் நிலையங்கள், வாகனங்கள், கட்டுமானம் மற்றும் தகர்த்தல் கழிவுகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளிப்படும் மாசினால் தில்லி உள்ளிட்ட நாட்டின் வடக்குப் பகுதிகளில் மாசின் அளவு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு, காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் அனைத்து தொழில்நுட்பங்களையும் அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
மாசினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், நாட்டில் சூரிய ஒளிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும், தற்சார்பு இந்தியாவை உருவாக்க புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்தமான எரிசக்தி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670658
(रिलीज़ आईडी: 1670948)
आगंतुक पटल : 168