இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

வில்வித்தை வீராங்கனைக்கு கொரோனா தொற்று

प्रविष्टि तिथि: 05 NOV 2020 7:09PM by PIB Chennai

தேசிய வில்வித்தை பயிற்சி முகாம் புனேவில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளில் இருந்து வில்வித்தை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வந்துள்ளனர். இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் படி, முகாமுக்கு வந்தவர்களிடம் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட 23 பேரில், வில்வித்தை வீராங்கனை ஹிமானி மாலிக்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தற்போது அறிகுறிகள் இல்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சிகள் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670403

**********************

(Release ID: (Release ID: 1670403)


(रिलीज़ आईडी: 1670579) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu