குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மூங்கிலின் மூலம் குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற திரு நிதின் கட்கரி அழைப்பு
Posted On:
05 NOV 2020 4:36PM by PIB Chennai
நாட்டின் மூங்கில் வளங்களை இன்னும் அதிக அளவில் பயன்படுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று வலியுறுத்தினார்.
இணையக் கருத்தரங்கு ஒன்றில் மெய்நிகர் மூங்கில் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பேசிய அவர், போக்குவரத்து செலவுகளைக் குறைத்து, அதிக அளவில் மூங்கில் வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
கட்டிடங்கள் மற்றும் உட்புற வேலைப்பாடுகள், கைவினைப் பொருட்கள், ஊதுவத்தித் தயாரிப்பு, துணிகள், உயிரி-எரிபொருள் போன்ற பல்வேறு துறைகளில் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது என்று திரு கட்கரி கூறினார்.
நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் மூங்கில்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுவதால், விரிவான மூங்கில் கொள்கை ஒன்றை வடிவமைக்குமாறு வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறையை அவர் கேட்டுக்கொண்டார்.
மூங்கில்களை வெட்டுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்னும் விதியை நீக்குமாறு தான் பிரதமரிடம் கேட்டுக் கொண்ட பிறகு, இதுதொடர்பான உத்தரவை வனத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் பிறப்பித்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670354
----
(Release ID: 1670433)
Visitor Counter : 160