அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மத்திய மருந்து ஆராய்ச்சி மைய மருத்துவ விஞ்ஞானிக்கு விருது

Posted On: 04 NOV 2020 6:06PM by PIB Chennai

எதிர்த்து உயிர்வாழும் யுக்திகளை வகுத்ததில் முக்கிய பங்காற்றிய மருத்துவ விஞ்ஞானி டாக்டர் சுசந்தா கர், இந்தாண்டுக்கான பேராசிரியர் .என்.பாதுரி நினைவு உரை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லீஷ்மேனியா டோனோவானி என்பது புரோட்டோசோவா  ஒட்டுண்ணி ஆகும்இது உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் காலா அசார் நோய் காரணியாகும். டாக்டர் சுசந்தா கர் தலைமையிலான  ஆய்வுக் குழு, லீஷ்மேனியாவின் மேக்ரோபேஜ்கள், டென்ட்ரிடிக் செல்கள் மற்றும் டி செல்கள் போன்ற நோயெதிர்ப்பு உயிரணுக்களுடன் தொடர்பு கொள்வதையும், இதன் காரணமாக இறுதியில் அது எதிர்ப்பு சக்தியை அழித்து, பாதிப்பை அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்

இந்திய உயிரியல் துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை அளிக்கும் மருத்துவ விஞ்ஞானிகளை அங்கீகரிப்பதற்கான பல விருதுகளை

இந்திய உயிரியல் வேதியலாளர்கள் அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு பெங்களூரு-வை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. பேராசிரியர் .என்.பாதுரி நினைவு உரை விருதுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 50 வயதுக்கு உட்பட்ட  உயிரியல் ரசாயனத்துறை விஞ்ஞானிகளுக்கு, குறிப்பாக பாராசைட் ஒட்டுண்ணி பாதிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும்  விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது இந்த விருதுக்கு டாக்டர் சுசந்தா கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தியின் ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670109

---


(Release ID: 1670347) Visitor Counter : 213