நிலக்கரி அமைச்சகம்
4 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்
Posted On:
04 NOV 2020 5:59PM by PIB Chennai
மூன்றாம் நாள் ஏலத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களும், சட்டீஸ்கரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கமும் ஏலம் விடப்பட்டன.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் கடந்த 3 நாட்களாக ஏலம் விடப்பட்டு வருகின்றன. 3ம் நாள் ஏலத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களும், சட்டீஸ்கரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கமும் ஏலம் விடப்பட்டன. இதில் கடும் போட்டி நிலவியது.
சட்டீஸ்கரில் உள்ள கரே-பால்மா-IV/1 என்ற நிலக்கரி சுரங்கத்தை ஜிந்தால் பவர் லிமிடெட் நிறுவனம் ஏலம் எடுத்தது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோதிதோரியா கிழக்கு மற்றும் மேற்கு சுரங்கங்களை ‘போல்டர் ஸ்டோன் மார்ட்’ என்ற நிறுவனம் ஏலம் எடுத்தது. மத்தியப் பிரதேசத்தின் உதர்தான் வடக்கு நிலக்கரி சுரங்கத்தை ‘ஜேஎம்எஸ்’ சுரங்க நிறுவனம் ஏலம் எடுத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தியின் ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670101
-----
(Release ID: 1670345)
Visitor Counter : 119