சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கர்நாடகாவில் கொவிட்-19 நடவடிக்கைகள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு

Posted On: 04 NOV 2020 7:55PM by PIB Chennai

கர்நாடகாவில் கொவிட் -19 –க்கு ஏற்ற நடத்தை முறைகளை உறுதி செய்யும் தயார் நிலை மற்றும் நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு செய்தார்.

கொவிட் 19 பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், தயார் நிலை மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்து வருகிறார்கர்நாடகாவில் கொவிட்-19 நிலவரம் குறித்து, மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் சுதாகர் மற்றும் மூத்த அதிகாரிகளிடம், டாக்டர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த, டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

 கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 10 மாத பயணத்தை நாம் விரைவில் நிறைவு செய்யப் போகிறோம். கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதிலும், குணப்படுத்துவதிலும்  நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. நாட்டில் குணமடைவோர் வீதம் இன்று 92%- கடந்துள்ளது. இறப்பு வீதமும் 1.49% -ஆக குறைந்துள்ளது. 2000-க்கும் மேற்பட்ட பரிசோதனை கூடங்களுடன், கொவிட் பரிசோதனை திறனும் அதிகரித்துள்ளது.

பிரதமர் அழைப்பு விடுத்த கொவிட்-19க்கு எதிரான  மக்கள் இயக்கத்தை, அனைவரும் பின்பற்ற வேண்டும். வரும் பண்டிகை காலம் மற்றும் குளிர் காலத்தில் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், கொவிட்-19-க்கு ஏற்ற நடத்தைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் கொவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு குணமடைவோர் வீதம் 93 சதவீதமாகவும், இறப்புவீதம் 1.35% வீதமாகவும் உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க, கர்நாடகா சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, தக்ஷின் கன்னடா, ஹாசன் மற்றும் பெலகாவி பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது கவலை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670183

*******

 (Release ID: 1670183)



(Release ID: 1670267) Visitor Counter : 111