மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய தொழில்நுட்பக் கழகம், சில்ச்சாரின் 18-வது பட்டமளிப்பு விழாவில் மெய்நிகர் முறையில் மத்திய கல்வி அமைச்சர் உரையாற்றினார்

Posted On: 02 NOV 2020 5:26PM by PIB Chennai

தேசிய தொழில்நுட்பக் கழகம், சில்ச்சாரின் 18-வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக மெய்நிகர் முறையில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசிய கல்வி கொள்கை 2020, பல லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்து விளங்கிட உதவும் என்றார்.

பட்டமளிப்பு விழாவின் கௌரவ விருந்தினராக அசாம் முதல்வர் திரு சர்பானந்த சோனோவாலும்சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் டி சகஸ்ரபுத்தேவும் கலந்து கொண்டனர்.

பட்டம் பெற்ற மாணவர்களை பாராட்டிய மத்திய கல்வி அமைச்சர், இது அவர்களுடைய வாழ்வின் மறக்க முடியாத தருணம் என்றார். சிறந்த கல்விப் பணியை ஆற்றி கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முன்னேறி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகம், சில்ச்சாரை அவர் பாராட்டினார்.

பண்டைய காலத்தில் உலகெங்கிலும் இருந்த அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்து கல்வி கற்றனர் என்று அமைச்சர் கூறினார். மதிப்பு சார்ந்த கல்வி முறை இந்தியாவை உலகத்தின் குருவாக ஆக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669505

*******

(Release ID: 1669505)



(Release ID: 1669604) Visitor Counter : 161