நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 காரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2020 4:54PM by PIB Chennai

2020-21 காரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020-21 காரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருகிறது.  இந்த மாநிலங்களில் நவம்பர் 1-ஆம் தேதி வரை  210.49 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 175.48 லட்சம் மெட்ரிக் டன்னை விட 19.95 சதவீதம் கூடுதலாகும். மொத்தக் கொள்முதலில், பஞ்சாபிலிருந்து மட்டும் 148.07  லட்சம் மெட்ரிக் டன் (70.34%) நெல்  கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 17.74 லட்சம் விவசாயிகள் ரூபாய் 39740.54 கோடியைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும், நவம்பர் 1-ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் ரூபாய் 57.83 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில்,  10571.140 மெட்ரிக் டன் பாசிப் பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6607 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பருத்திக் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

நவம்பர் 1-ஆம் தேதி வரை ரூபாய் 184563 லட்சம் மதிப்பில் 633719 பேல்கள், 120437 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669490

*******

(Release ID: 1669490)


(வெளியீட்டு அடையாள எண்: 1669569) வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , Urdu , Telugu , English , Marathi , हिन्दी , Manipuri , Punjabi