பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

தேசிய ஒற்றுமை தினம் இணையக் கருத்தரங்கின் மூலம் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது

प्रविष्टि तिथि: 31 OCT 2020 4:43PM by PIB Chennai

தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படும் திரு சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் இணையக் கருத்தரங்கின் வாயிலாக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இன்று கொண்டாடப்பட்டது.

மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், எண்ணெய் மற்றும் எரிவாயு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இதர நிறுவனங்களின் சுமார் 1000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

திரு சர்தார் பட்டேல் பிறந்த நாளன்று சிறப்பான முறையில் அவருக்கு அஞ்சலி செலுத்திய மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் திரு தருண் கபூர், சுதந்திர இந்தியாவுக்கு பட்டேல் ஆற்றிய தன்னிகரில்லா பங்களிப்பை நினைவு கூர்ந்தார். சர்தார் பட்டேலின் லட்சியங்களை தினசரி வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டார்.

சர்தார் பட்டேலின் வழியில் வெளிப்படையாகவும், மனித நேயத்துடன் சிறப்பான முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பணியாளர்களை வலியுறுத்திய அவர், பட்டேலின் நினைவை நாம் போற்ற வேண்டும் என்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை செயலாளர் திரு ரமேஷ் நேகி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு எம் பதான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669114

-----


(रिलीज़ आईडी: 1669140) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi