ஜல்சக்தி அமைச்சகம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து ஆய்வு

Posted On: 30 OCT 2020 2:42PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல் ஜீவன் இயக்கம் அமல்படுத்தப்படும் விதம் குறித்து ஜல் ஜீவன் அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.

55.58 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற இலக்கில் 2020-21-ம் ஆண்டு வரை வெறும் 2.20 லட்சம் குடிநீர் இணைப்புகள் மட்டுமே கொடுத்து மேற்கு வங்க அரசு மோசமான செயல்திறனை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் திட்டம் மற்றும் அமலாக்கல் குறித்து ஒரு இடைக்கால மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தேசிய ஜல் ஜீவன் இயக்கக் குழுவிடம் மாநில அரசு அதிகாரிகள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினர். 2024-ம் ஆண்டுக்குள் 1.63 கோடி கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் தரும் இலக்கை அடைவது என மேற்கு வங்க மாநில அரசு தீர்மானித்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் 22 மாவட்டங்கள் 341 பிளாக்குகள், 41,357 கிராமங்கள் மற்றும் 1.07 லட்சம் வாழ்விடங்களும் உள்ளன. 2020-21ம் ஆண்டுக்குள் 55.58 லட்சம் குடிநீர் இணைப்புகள் தர வேண்டும் என்ற இலக்கை விடவும், மிகவும் குறைவாக 2.20 லட்சம் குடிநீர் இணைப்புகளை மட்டுமே மாநில அரசு கொடுத்துள்ளது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. கிடைக்கக் கூடிய மத்திய அரசின் நிதி மற்றும் அதற்கு ஈடாக மாநில அரசு நிதி பங்கின் பயன்பாடு  மற்றும் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் அடிப்படையில் திட்ட அமலாக்கத்தின் அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. 2020-21-ம் ஆண்டில் மேற்கு வங்க அரசுக்கு ரூ.1610.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் செயல்பாட்டு அடிப்படையிலான ஊக்கத் தொகை வடிவில் திட்ட அமலாக்கத்தின் செயல்பாடுகள் அடிப்படையில் கூடுதல் நிதி வழங்கப்படும். கூடுதலாக, மேற்கு வங்கம் 15-வது நிதி கமிஷன் அனுமதியாக பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு ரூ.4,412 கோடி பெற்றுள்ளது. அதில் 50% தொகையை குடிநீர் மற்றும் சுகாதாரத்துக்காக செலவிட வேண்டியது கட்டாயமாகும். இந்த ஆய்வுக்கூட்டத்தில், மத்திய நிதி அனுமதிகள் இழப்பை தவிர்க்கும் வகையில் ஒதுக்கப்படும் நிதி கிடைக்கவும் இருக்கும் நிதியை உபயோகித்து குறிப்பிட்ட கால வரம்புக்குள் இலக்கை அடையும்படி திட்டத்தை விரைந்து அமல்படுத்தும்படியும் அமைச்சகத்தின் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அனைவருக்குமான குடிநீர் விநியோகம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் என்ற இலக்கை அடைவதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் அளிக்க மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668813

----- 



(Release ID: 1668907) Visitor Counter : 118