பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பான மொபைல் இணைய செயலி, கட்டமைப்பு நிர்வாக மென்பொருளை இந்திய ராணுவம் தொடங்கியது
Posted On:
29 OCT 2020 12:50PM by PIB Chennai
இந்திய ராணுவத்தின் சார்பில் கட்டமைப்பு நிர்வாக மென்பொருள் மற்றும் மொபைல் இணைய செயலி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடையும் முன்பு கட்டப்பட்ட பழைய குடியிருப்புகளுக்குப் பதில் புதிய குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட முக்கியமான பணிகள் ராணுவ நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகளில் பல்வேறு முகமைகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இது அதிக காலம் பிடிக்கும் செயலும் ஆகும். இப்போது கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மேலாண்மை உள்ளிட்ட நிலத்தைக் கண்டறிதல், பணிகளை திட்டமிடுதல் மற்றும் கண்காணித்தல், சூழல் பாதுகாப்பு மற்றும் விடுதிக் கொள்கைகள் ஆகிய அனைத்துப் பணிகளும் பழைய நடைமுறைப்படி ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நேரம் விரையம் ஆகிறது மற்றும் திறன் இல்லாமலும் இருக்கிறது.
எனவே அனைத்து பங்கெடுப்பாளர்களும் அதிகாரம் பெற்று மாற்றம் பெறவும் மற்றும் மேலும் திறனுடன், அதிக பட்ச பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மையுடன் திகழ்வதற்கு தானியங்கி முறை முக்கியம் என உணரப்பட்டது. இதையடுத்து கட்டமைப்பு நிர்வாக முறை என்ற பெயரிலான மென்பொருளை இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. 2020 அக்டோபர் 28-ம் தேதி நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் கருத்தரங்கின் இடையே ராணுவத் தலைமை தளபதியால் இந்த மென்பொருள் தொடங்கப்பட்டது.
இது தவிர, பாதுகாப்பான இணையப் பயன்பாடு என்ற பெயரிலான தகவல் பரிமாற்ற மொபைல் செயலியை ஆத்மநிர்பார் பாரத் இயக்கத்தின் கீழ் இந்திய ராணுவம் உருவாக்கி உள்ளது. இது, ஆண்ட்ராய்டு தளத்தில் இணையம் வாயிலாக வீடியோ அழைப்பு சேவைகள், குரல் மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகளை பாதுகாப்புடன் வழங்கும். இது, எண்ட் டூ எண்ட் குறியாக்க செய்தியிடல் நெறிமுறையை உபயோகித்து உருவாக்கப்பட்ட வணிக ரீதியிலான தகவல் பரிமாற்ற செயலிகளான வாட்ஸ் ஆப், டெலிகிராம், சம்வத் மற்றும் ஜிஐஎம்எஸ் ஆகியவற்றைப் போன்றதாகும். தேவைக்கு ஏற்ப மாற்றப்படக்கூடிய குறியீட்டு முறை, உள்ளூர் உள் சேவையகங்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் எஸ்ஏஐ செயலி திகழ்கிறது.
இந்தியன் கம்ப்யூட்டர் அவசரகால உதவி குழுவால் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சைபர் குழு மற்றும் தணிக்கையாளர்கள் (சிஇஆர்டி-ஐஎன்) வாயிலாக இந்த செயலி சோதனை செய்யப்பட்டது. இந்த செயலியை அறிவு சார் சொத்துரிமையாக தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளும், என்ஐசி கட்டமைப்பில் வெளியிடுவதற்கும் ஐஓஎஸ் தளத்தில் இயங்குவதற்கும் ஆன பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ராணுவ சேவைகளுக்குள் தகவல் பரிமாற்ற செயலியாக இது உபயோகப்படுத்தப்பட உள்ளது.
இந்த செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த செயலியை முன்னெடுத்த கர்னல் சாய் சங்கரை பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்புகளை ஆங்கிலத்தில் இங்கே காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668348
********
(Release ID: 1668348)
(Release ID: 1668378)
Visitor Counter : 298