நித்தி ஆயோக்

இந்திய உள்கட்டமைப்புத்துறையில் மாற்றங்களை உருவாக்க நிதி ஆயோக், க்யூசிஐ சார்பில் தேசிய திட்டம் தொடக்கம்

Posted On: 28 OCT 2020 8:59PM by PIB Chennai

இந்தியாவின் உள்கட்டமைப்புத்துறையில் தீவிர சீர்த்திருத்தங்களை கொண்டு வரும் வகையில் நிதி ஆயோக், இந்திய தரக் கவுன்சில் ஆகியவை இணைந்து தேசிய திட்டம் மற்றும் திட்ட மேலாண்மை கொள்கை கட்டமைப்பு (என்பிஎம்பிஎஃப்) முயற்சியை தொடங்கி இருக்கின்றன.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுச்சாலைகள், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, இந்திய திட்ட நடைமுறை மற்றும் திட்டமேலாண்மைக்கான 'இந்திய உள்கட்டமைப்பு அறிவுசார் முறை' என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும் தேசிய திட்டம் மற்றும் திட்ட மேலாண்மை கொள்கை கட்டமைப்பு முயற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த், இந்திய தரக்கவுன்சில் தலைவர் திரு ஆதில் ஜைனுல்பாய் ஆகியோர் பங்கேற்றனர். கட்டமைப்புத்துறைசர்வதேச திட்ட மேலாண்மை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. கட்கரி, என்பிஎம்பிஎஃப் முயற்சியானது வலுவான இந்தியாவை கட்டமைப்பதற்கான பிரதமரின் தற்சார்பு இந்தியா கண்ணோட்டத்தை நனவாக்குவதற்கு உதவும் என்றார். இதனை அடைவதற்கு நமக்கு நல்ல தரமான கட்டமைப்பு தேவை என்று கூறிய அவர், உயிரி சூழல், சூழலியல் ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்ளாமல் வீணாகும் பொருட்கள் மற்றும் செலவுகளை நாம் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திட்டங்கள் காலவரையறைக்கு உட்பட்டதாகவும் பலன் சார்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.   

சாகர்மாலா, பாரத் மாலா போன்ற பெரிய திட்டங்களில் ஏற்கனவே உபயோகிக்கப்படும் திட்டம் மற்றும் திட்ட மேலாண்மை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த திரு. நிதின் கட்கரி, “இது போன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை உபயோகிப்பது மற்றும் மேற்கொள்ளுதல் என்பது கலப்பின வருடாந்திர மாதிரி என்னும் புதுமையான நிதியுதவி முறையில் ஏற்கனவே கையாளப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்;

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668249

*******

(Release ID: 1668249)(Release ID: 1668332) Visitor Counter : 259