நித்தி ஆயோக்

மின்சார பயன்பாடு குறித்த அறிக்கையை நிதி ஆயோக், ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் ஸ்மார்ட் பவர் இந்தியா வெளியிட்டன

Posted On: 28 OCT 2020 6:35PM by PIB Chennai

நிதி ஆயோக், ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் ஸ்மார்ட் பவர் இந்தியா ஆகியவை இணைந்து 'இந்தியாவில் மின்சார பயன்பாடு மற்றும் விநியோக அமைப்புகளை ஒப்பிடுதல்' என்னும் அறிக்கையை வெளியிட்டன.

பத்து மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் 65 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 25,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீடுகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வு, 25 விநியோக முகமைகளை மதிப்பீடு செய்தது.

92 சதவீதத்துக்கும் அதிகமான நுகர்வோர் தங்களது இடங்களில் இருந்து 50 மீட்டருக்குள் மின்சார உள்கட்டமைப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 87 சதவீதம் பேர் தொகுப்பு சார்ந்த மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். 13 சதவீதம் பேர் தொகுப்பு சாராத மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர் அல்லது மின்சாரத்தை பயன்படுத்தவில்லை.

 

மின் விநியோகத்தின் கால அளவு ஒரு நாளைக்கு 17 மணி நேரம் என்று கணிசமாக அனைத்து பிரிவுகளிலும் முன்னேறி இருக்கிறது. 83 சதவீதம் வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 66 சதவீதம் பேர் மின்சார சேவைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். இதில் 74 சதவீதம் பேர் நகர்ப்புறங்களையும், 60 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும் ஆவார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668185

*******

(Release ID: 1668185)(Release ID: 1668325) Visitor Counter : 164