மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

ஆரோக்கியசேது செயலி தொடர்பான ஆர்டிஐ மனு – மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மத்திய அரசு விளக்கம்

Posted On: 28 OCT 2020 7:01PM by PIB Chennai

ஆரோக்கியசேது செயலி தொடர்பான ஆர்டிஐ மனுவுக்கு மத்திய தகவல் ஆணையம்(சிஐசி) பிறப்பித்த உத்தரவுவுகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. சிஐசி உத்தரவுப்படி மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய இ-நிர்வாக பிரிவு, தேசிய தகவல் மையம் (என்ஐசி) ஆகியவற்றி மத்திய தகவல் தொடர்பு அதிகாரிகள் நவம்பர் 24ம் தேதி ஆஜராக உள்ளனர். 

து தொடர்பான விளக்கம்:

ஆரோக்கிய சேது செயலி, கொவிட் -19 தொற்றை கட்டுப்படுத்துவதில் அதன் பங்கு குறித்து எந்த சந்தேகமும் இருக்க கூடாது. கொவிட்-19-ஐ எதிர்த்து போராட, இதை பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மத்திய அரசு தொடங்கியது. முடக்க கட்டுபாடுகளுடன் தொற்று நோயின் தேவைகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும், தொடர்புகளை கண்டறியும் நோக்குடன், 21 நாட்களில் இந்த செயலி இந்திய நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல், ஆரோக்கிய சேது செயலியின் செயல்பாடுகள்  பற்றி  தொடர்ந்து ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப்படுகின்றன. இந்த செயலியுடன் டன் தொடர்புடையவர்கள் பற்றியும் ஊடகங்களில் பகிரப்பட்டது.

இவற்றை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

https://github.com/nic-delhi/AarogyaSetu_Android/blob/master/Contributors.md.

ஆரோக்கிய செயலி குறித்து அனைத்து விவரங்களும்  aarogyasetu.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. கொவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் இது எவ்வாறு உதவுகிறது என்பது பற்றியும் டி.வி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்த செயலியை 16.23 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தும் கொவிட் 19 நோயாளிகளின் ப்ளூடூத் தொடர்புகளை அடையாளம் காணவும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான எச்சரிக்கைகளை விடுக்கவும் இந்த செயலி உதவியுள்ளது.  அரோக்கியசேது செயலி அறிவுரை பெற்றவர்களில் 25 % பேருக்கு பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.  தொற்று பாதிப்பு உள்ள இடங்களை கண்டறியவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்ததுவம் ஆரோக்கிய சேது செயலி பெரிதும் உதவியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668194

**********************(Release ID: 1668279) Visitor Counter : 219