சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கட்டுமான கருவிகளின் வாகனங்களுக்கான பாதுகாப்புகள்; மத்திய சாலைக்குப்போக்குவரத்து அமைச்சகம் வெளியீடு

Posted On: 28 OCT 2020 2:35PM by PIB Chennai

பொதுச்சாலைகளில் இதர வாகனங்களுக்கு மத்தியில் கட்டுமான கருவிகளைக் கொண்ட வாகனங்களை ஓட்டுவதற்கான பாதுகாப்பு தேவைகள், வாகனத்தை இயக்குபவருக்கான பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் முழுமையாக தீர்வு காணும் வகையில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சார்பில், இன்று (2020 அக்டோபர் 27) ஜிஎஸ்ஆர் 673() என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாறுபடிப்படியான முறையில் (முதல் கட்டமாக (ஏப்ரல் 2021) மற்றும் இரண்டாம் கட்டமாக (ஏப்ரல் 2024)) இவை அமல்படுத்தப்படும். இப்போது 1989-ம் ஆண்டின் சிஎம்விஆர் கட்டுமான கருவி வாகனங்களின் படி சில பாதுகாப்பு தேவைகள் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளன.  

உலோகம் அல்லாத எரிபொருள் டேங்குகள், குறைந்தபட்ச அணுகுதல் பரிமாணங்கள், படிகளுக்கான அணுகுதல் முறை, முதன்மை அணுகுதல், வெளியேறுவதற்கான மாற்று வழி, பராமரிப்பு பகுதிகள், ஆபரேட்டர் பகுதிகளுக்கான தேவைகள், காட்சிப்படுத்துவதற்கான தேவைகள் போன்ற பல்வேறு பாதுகாப்பு தேவைகளை அறிமுகம் செய்வதும் ஏஐஎஸ்(தானியங்கி தொழிலக தர நிலை)- அறிமுகம் செய்வதும் இந்த தரநிலையின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668098

********

(Release ID: 1668098)(Release ID: 1668130) Visitor Counter : 176