நிதி அமைச்சகம்
இரண்டு விதிமுறைகளுக்கு இந்திய நிதி சேவைகள் மைய ஆணையம் ஒப்புதல் அளித்தது
Posted On:
27 OCT 2020 10:41PM by PIB Chennai
இந்திய நிதி சேவைகள் மைய ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. விரிவான விவாதங்களுக்குப் பிறகு, கீழ்கண்ட ஒழுங்குமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அ. சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் (தங்கக் கட்டிகள் பரிமாற்றம்) ஒழுங்குமுறைகள், 2020
ஆ. சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் (சர்வதேச 'இன்ஹவுஸ்' மையங்கள்), ஒழுங்குமுறைகள், 2020
சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் (தங்கக் கட்டிகள் பரிமாற்றம்) ஒழுங்குமுறைகள், 2020-இன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தங்கக் கட்டிகள் பரிமாற்ற சந்தையின் செயல்பாடுகளுக்கு பொறுப்பான அமைப்பாக இந்திய நிதி சேவைகள் மைய ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* தங்கக் கட்டிகள் வர்த்தகத்துக்கான ஒட்டுமொத்த சூழலியலை உருவாக்குவதற்கான வரைவு விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து சந்தை நடவடிக்கைகளுக்கும் ஒருங்கிணைந்த தளத்தை வழங்க இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் (சர்வதேச 'இன்ஹவுஸ்' மையங்கள்), ஒழுங்குமுறைகள், 2020 -இன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* ஜிஐசி எனப்படும் சர்வதேச 'இன்ஹவுஸ்' மையங்கள் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த முறையிலும் வர்த்தகத்தை நடத்தலாம்.
* சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்துக்குள் அமைக்கப்படும் ஜிஐசி, சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்துக்குப் பொருந்தும் வரி விடுமுறை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெற தகுதியுடையது ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668007
*********
(Release ID: 1668007)
(Release ID: 1668068)
Visitor Counter : 216