ஜல்சக்தி அமைச்சகம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 100 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கம் ஆய்வு நடத்தியது

प्रविष्टि तिथि: 26 OCT 2020 2:53PM by PIB Chennai

ஜல் ஜீவன் இயக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை குறித்து அதன் அதிகாரிகள் தேசிய ஜல் ஜீவன் இயக்கக் குழுவினருக்கு காணொலி மூலம் எடுத்துக் கூறினார்கள்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஜல் ஜீவன் இயக்கத்தின் செயல்படுத்தப்படுதல் குறித்த இடைக்கால ஆய்வு கூட்டத்தில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விளக்கம் மத்திய குழுவினருக்கு அளிக்கப்பட்டது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 100 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள 400 கிராமங்களில் உள்ள 65,096 ஊரக வீடுகளில், 33,889 வீடுகளில் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..

மீதம் இருக்கும் வீடுகளுக்கு 2021-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் தண்ணீர் இணைப்பு வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667565

******

(Release ID: 1667565)


(रिलीज़ आईडी: 1667583) आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Telugu