நிதி அமைச்சகம்

2018-19ம் ஆண்டுக்கான வருடாந்திர வருவாய் மற்றும் சமநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு

Posted On: 24 OCT 2020 3:45PM by PIB Chennai

கொவிட் -19 பெருந்தொற்று தொடர்பாக அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் வழக்கமான வணிக செயல்பாடுகள் சாத்தியமில்லை என்பதால் 2018-19-ம் ஆண்டுக்கான சமநிலை அறிக்கை (படிவம் ஜிஎஸ்டிஆர்-9சி)., ஆண்டு வருவாய் (படிவம் ஜிஎஸ்டிஆர் 9) தாக்கல் செய்வதற்கான தேதி நீடிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்தன. தணிக்கையாளர்கள் மற்றும் வணிக செயல்பாடுகள் இணக்கமாக மேற்கொள்ள வசதியாக காலக்கெடுவானது 2020 அக்டோபர் 31-க்கு அப்பாலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப்படி, 2018-19-ம் நிதி ஆண்டுக்கான ஆண்டு வருவாய் (படிவம் ஜிஎஸ்டிஆர்9/ ஜிஎஸ்டிஆர்9) மற்றும் சமநிலை அறிக்கை (படிவம் ஜிஎஸ்டிஆர்-9சி) ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2020 அக்டோபர் 31-ம் தேதியில் இருந்து 2020 டிசம்பர் 31-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது. இந்த முடிவுகளைப் பின்பற்றுவதற்கான அறிவுப்புகள் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667289

------



(Release ID: 1667309) Visitor Counter : 263