இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

வயதுக்கு ஏற்ற கச்சிதமான உடல் தகுதி நெறிமுறைகள்; பஞ்சாப்பில் தொடக்கம்

Posted On: 23 OCT 2020 6:47PM by PIB Chennai

சுகாதார விஷயங்கள், உடல் நலம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து வயதினருக்குமானவயதுக்கு ஏற்ற உடற்தகுதி நெறிமுறைகள்’  பஞ்சாப் மாநிலத்தில் அந்த மாநில விளையாட்டுத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலன் துறை அமைச்சர் திரு ராணா குர்மித் சிங் சோதியால் தொடங்கப்பட்டது.

இது, பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மையம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் முயற்சியான ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டிருக்கிறது.

தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இதனை தொடங்கி வைத்த திரு. ராணா குர்மித் சிங் சோதி இது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சிறந்த முயற்சி என்றும் உடற்தகுதி நெறிமுறைகள் இன்றைக்கு பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்றும்கூறினார். எனவே, சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும் இந்த உடற்தகுதி குறிப்புகள் பற்றி  அறிந்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்இது நாடு முழுவதும் உடற்பயிற்சி குறித்த பரந்த அறிவை வழங்கும் என்ற அவர்ஃபிட் இந்தியா என்ற இயக்கத்தின் பெயர் அனைத்து வயதினர் மத்தியில் உடல் தகுதி பெறும் வகையில் ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டார். இது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் விளையாட்டு ஆணையத்தின் சிறப்பான முயற்சி என்றும் பாராட்டுத் தெரிவித்தார். அனைத்து வயதினரும் இதனை பின்பற்றும் வகையிலும், தங்களது உடற் தகுதியை பரிசோதித்து பார்க்கும் வகையிலும் வயதுக்கு ஏற்றபடியான குறிப்பிட்ட உடல் தகுதி நெறிமுறைகள் வடிவமைக்கப்படுள்ளதற்கு தமது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667102

----


(Release ID: 1667173) Visitor Counter : 133