அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை: 'குப்பையில் இருந்து வளம்'
Posted On:
23 OCT 2020 6:43PM by PIB Chennai
அதிகரித்துக் கொண்டே வரும் மக்கள் தொகை மற்றும் வேகமான நகரமயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக, கழிவு மேலாண்மையில் மிகப்பெரிய சவாலை நாடு எதிர்நோக்கியுள்ளது.
62 மில்லியன் டன்களாக தற்போது இருக்கும் கழிவின் அளவு, 2030-இல் 150 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமான முறைகளை பின்பற்றாமல் தற்போதைய முறையில் குப்பைகள் கையாளப்படுமானால், அதிகளவில் நிலம் தேவைப்படுவதோடு சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.
பிளாஸ்மா ஆர்க் எரிவாயு முறையை பயன்படுத்தி திடக் கழிவை கையாளும் முறை சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததோடு மட்டுமில்லாமல், எரிவாயுவையும் உற்பத்தி செய்யும். இதன் மூலம் சின்கேஸ் என்னும் எரிவாயுவை குப்பையில் இருந்து தயாரிக்கலாம். ஆனால், இந்த முறைக்கு செலவு அதிகமாகும்.
சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கியுள்ள நகர்ப்புற திடக் கழிவு கையாளும் வசதியின் மூலம் திடக்கழிவை பரவலாக்கி அழிப்பதோடு, மதிப்பு கூட்டப்பட்ட இதர பொருட்களையும் உருவாக்கலாம். காய்ந்த இலைகள் மற்றும் புல்லில் இருந்து இவற்றை உருவாக்க முடியும்.
மண்புழு உரத்தை உருவாக்கி இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். பையோமாஸ் கழிவு அகற்றம், பாலிமர் கழிவு அகற்றம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் கழிவு அகற்றம் ஆகியவை இதர முறைகளாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667099
---
(Release ID: 1667152)
Visitor Counter : 541