ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

Posted On: 22 OCT 2020 2:31PM by PIB Chennai

2019-20-ம்  நிதியாண்டுக்கு கெசடட் அல்லாத 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான போனஸ் வழங்கப்பட உள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் ரூ.2081. 68 கோடியாக இருக்கும் என்று மதிப்படப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்பிஎஃப்/ஆர்பிஎஸ்எஃப் தவிர்த்து) 2019-2020 நிதி ஆண்டில் 78 நாட்களுக்கு இணையான, உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்க வேண்டும் என்ற மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கைக்கு கடந்த 21-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 78 நாட்களுக்கு  இணையான போனஸ் நிதி செலவினம் என்பது ரூ.2081.68 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தியோடு இணைக்கப்பட்ட போனஸ் தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்ட ஊதிய கணக்கீட்டு வரம்பு, தகுதி வாய்ந்த கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு அதிகபட்சமாக வழங்கப்பட க்கூடிய தொகை 78 நாட்களுக்கு ரூ.17,951 ஆக இருக்கும். இந்த முடிவின் மூலம் 11.58 லட்சம் கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்கள் பலன் பெறுவர்.

உற்பத்தியோடு இணைந்த போனஸ் நாடு முழுவதும் உள்ள அனைத்து கெசடட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கும் (ஆர்பிஎஃப் / ஆர்பிஎஸ்எஃப் தவிர்த்து) பொருந்தும். தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியோடு இணைந்த போனஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் தசரா/பூஜை விடுமுறை தினங்களுக்கு முன்பாக வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும், அமைச்சரவை முடிவின் படி விடுமுறை தினங்களுக்கு முன்பாக போனஸ் வழங்கப்படும்

 மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666740

---- 



(Release ID: 1666783) Visitor Counter : 228