ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

என்எஃப்எல்., சிசிஐ ஒருங்கிணைத்த விவசாயிகள் பயிற்சி முகாம்

Posted On: 21 OCT 2020 5:35PM by PIB Chennai

தேசிய உரங்கள் லிமிடெட், இந்திய பருத்திக் கழகம் ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாமை ராஜஸ்தானில் நேற்று நடத்தின.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் உள்ள விவசாய ஆராய்ச்சி மையத்தில் இந்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 

பிகானேர், ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 75 முற்போக்கு விவசாயிகள் இதில் பங்கேற்றனர். பயிர் சாகுபடி செலவுகளைக் குறைத்து நல்ல வருவாய் பெற விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

பயிற்சியின்போது, பருத்தி விளைவிக்கும்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் உரிய தீர்வுகளைக் கூறினர். பயிர் விளைச்சல், தரம் ஆகியவற்றை அதிகரிக்கும் வகையிலான நவீன இயந்திரங்களின் உபயோகங்கள் குறித்தும் இந்திய பருத்திக் கழகம், தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள் எடுத்துக் கூறி விவசாயிகளை ஊக்குவித்தனர். பயிற்சி முகாமில் பங்கேற்ற 75 விவசாயிகளுக்கும் பருத்தி அறுவடை செய்யும் இயந்திரங்கள் தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666475


(Release ID: 1666701) Visitor Counter : 154