அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘டை மெத்தில் ஈதர்’ எரிபொருள் பர்னர் ஆலை: மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடக்கம்

Posted On: 21 OCT 2020 6:41PM by PIB Chennai

டை மெத்தில் ஈதர் ( டிஎம்இ) எரிபொருள் பயன்படுத்தப்படும் சிறப்பு பர்னர் ஆலை ‘‘ஆதித்தி உர்ஜா சஞ்ச்’’  மற்றும் டிஎம்இ-எல்பிஜி எரிபொருள் கலந்த சிலிண்டர் ஆகியவற்றை புனேவில் உள்ள சிஎஸ்ஐஆர்-என்சில்(சேிய ரசாயண ஆய்வு மையம்) வளாகத்தில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

டைமெத்தில் ஈதர் எரிபொருள்(டிஎம்இ)  மிகவும் சுத்தமான எரிபொருள். ஒரு நாளைக்கு 20 முதல் 24 கிலோ  டிஎம்இ எரிபொருள் தயாரிக்கும் ஆலையை  அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்) - தேசிய ரசாயண பரிசோதனை கூடம் (என்சிஎல்) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த எரிபொருளின் அடர்வுஎல்பிஜி-யின் அடர்வை விட வேறுபட்டு இருப்பதால், டிஎம்இ எரிபொருளை சாதரன கேஸ் அடுப்பு பர்னரில் பயன்படுத்த முடியாது.   இதற்காக சிறப்பு பர்னரை சிஎஸ்ஐஆர்-என்சிஎல் இணைந்து உருவாக்கியுள்ளது. இதற்கு ஆதித்தி உர்ஜா சஞ்ச்என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த புதிய பர்னர்டிஎம்இ, டிஎம்இ மற்றும் எல்பிஜி கலந்த எரிபொருள், மற்றும் எல்பிஜி எரிபொருளில் எரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையான

ஆக்ஸிஜனை பயன்படுத்தி, பாத்திரத்துக்கு அதிகளவிலான வெப்பத்தை கடத்தும் வகையில் புதிய வடிவில் இந்த பர்னர் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஎம்இ-எல்பிஜி கலந்த கேஸ் சிலிண்டரை பொது மக்கள் மற்றும் சிஎஸ்ஐஆர்-எசிஎல் கேன்டீன்கள் உபயோகத்துக்கு  டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஒப்படைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

ஆதித்தி உர்ஜா சஞ்ச்  பர்னர் ஆலை, டிஎம்இ-எல்பிஜி கலந்த சிலிண்டர் தொடக்கம், மேக் இன் இந்தியா திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஊக்கமளிக்கும். சிலிண்டர்கள், கேஸ் ஸ்டவ், ரெகுலேட்டர்கள், கேஸ் ட்யூப் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் பயனளிக்கும். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666510



(Release ID: 1666695) Visitor Counter : 193