உள்துறை அமைச்சகம்

இந்தியர்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமான வாழ்வுமே மோடி அரசின் மிக முக்கிய முன்னுரிமைகள் ஆகும்: அமித் ஷா

प्रविष्टि तिथि: 20 OCT 2020 8:12PM by PIB Chennai

இந்திய மக்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமான வாழ்வுமே பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மிக முக்கிய முன்னுரிமைகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று கூறினார்.   

நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரைக்கு பிறகு அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திரு அமித் ஷா, "கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போரில், மக்களின் உயிர்களை காப்பதையே அதன் தலையாயக் கடமையாக மோடி அரசு கருதுகிறது. நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையின் போது இந்த உறுதியை பிரதமர் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்," என்றார்.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை எச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட வேண்டாம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளை தங்களையும் தங்களது குடும்பத்தையும் காத்துக் கொள்வதற்கான வழி காட்டும் மந்திரமாக பின்பற்றுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர், "ஒன்றுபட்ட மற்றும் உறுதி பூண்ட இந்தியாவால் மட்டுமே இந்தப் பெரும்தொற்றை வெல்ல முடியும்," என்றார்.

----


(रिलीज़ आईडी: 1666272) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Telugu