தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2020 செப்டம்பர் மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கு அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்கள் அறிவிப்பு

Posted On: 20 OCT 2020 4:00PM by PIB Chennai

2020 செப்டம்பர் மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கு அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் 11 மற்றும் 10 புள்ளிகள் உயர்ந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1037-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1043 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. மைசூர் பருப்பு, நிலக் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை ஏற்றம் இந்தக் குறியீட்டு எண் அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில்1234 புள்ளிகளுடன் தமிழ்நாடு  முதலிடத்தில் இருக்கிறது. 816 புள்ளிகளுடன் இமாச்சல பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1218 புள்ளிகளுடன் தமிழ்நாடு  முதலிடத்திலும், 863 புள்ளிகளுடன் இமாச்சல பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக பணவீக்கம் குறைந்து வருவதால் ஊரகத் தொழிலாளர்களின் வருமானம்  அதிகரிக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666111

-----


(Release ID: 1666260) Visitor Counter : 168