தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2020 அக்டோபர் 20 அன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி நிதி ஆண்டு 2021-இன் முதல் ஐந்து மாதங்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளது

Posted On: 20 OCT 2020 5:56PM by PIB Chennai

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.06 லட்சம் நிகர சந்தாதாரர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்தனர் என்று ஈபிஎப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கொவிட்-19-இன் பாதிப்புக்கு இடையிலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அதிகளவில் சந்தாதாரர்கள் இணைந்துள்ளது, பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மெதுவாக விடுபட்டு கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தை நோக்கி நிலைமை முன்னேறி வருவதை காட்டுகிறது.

மாநிலங்களை பொருத்தவரை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகியவற்றில் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 2020-ஆம் ஆண்டின் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இணைந்துள்ள மொத்த உறுப்பினர்களில் 57 சதவீதம் மேற்கண்ட மாநிலங்களில் உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666143

-----


(Release ID: 1666195)