எஃகுத்துறை அமைச்சகம்

ஊரக மற்றும் வேளாண் துறைகளில் எஃகின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக, எஃகு அமைச்சகம், இணைய கருத்தரங்கை நடத்தவுள்ளது

Posted On: 18 OCT 2020 11:47AM by PIB Chennai

எஃகு அமைச்சகமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ) இணைந்து, "தற்சார்பு இந்தியா: ஊரகப் பொருளாதாரம், வேளாண்மை, ஊரக மேம்பாடு, பால் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் எஃகின் பயன்பாட்டை அதிகப்படுத்துவது" என்னும் தலைப்பில் வரும் 20ஆம் தேதி இணைய கருத்தரங்கை நடத்துகின்றன.

இதில், மத்திய எஃகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய ஊரக மேம்பாடு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறைக்கான அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமரும் இந்த இணைய கருத்தரங்கில் கலந்து கொள்வார். மத்திய எஃகுத் துறையின் இணை அமைச்சர் திரு ஃபாகன் சிங் குலாஸ்தே, சிறப்புரை ஆற்றுவார்.

ஊரக மேம்பாட்டுத் துறையில் எஃகு மற்றும் எஃகுப் பொருட்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவை குறித்தும், பல்வேறு துறைகளில் எஃகின் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.

புதிய பொருட்களைத் தயார் செய்வது, ஆராய்ச்சிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக எஃகைக் கொள்முதல் செய்வதில் உள்ள சவால்களைச் சந்திப்பது குறித்தும் இந்த கருத்தரங்கில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665623

**********************


(Release ID: 1665637) Visitor Counter : 157