நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதல்

प्रविष्टि तिथि: 17 OCT 2020 5:37PM by PIB Chennai

2020-21 கரிப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

உத்தரகண்ட் உள்ளிட்ட புதிய மாநிலங்களில் நெல்லின் கொள்முதல் தொடங்கப்பட்டதையடுத்து,

2020-21 கரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை 14495.22 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 76.77 லட்சம் மெட்ரிக் டன், 6.69 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 16ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 5.21 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில்,  723.79 மெட்ரிக் டன் அவரை விதையும், உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 681 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 16ஆம் தேதி வரை 42555.85 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 150654 பேல்களை, இந்திய பருத்தி நிறுவனம், 30139 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665495

**********************


(रिलीज़ आईडी: 1665516) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi