ஆயுஷ்
யோகா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த இணைய கருத்தரங்கை மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆய்வுக் குழு நடத்தியது
प्रविष्टि तिथि:
16 OCT 2020 6:42PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆய்வுக் குழு,
யோகா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த இணைய கருத்தரங்கை நடத்தியது.
விஹாரா என்னும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கு, நோய் எதிர்ப்பு சக்தியின் பல்வேறு கூறுகளைப் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப்பட்டது.
மருத்துவ நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடக்க உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு ரஞ்சித் குமார், கொவிட் காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். யோகாவின் சிறப்புகளையும் அவர்கள் எடுத்துரைத்தார்.
மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆய்வுக் குழுவின் இயக்குநர் டாக்டர் ராகவேந்திர ராவ், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை வரவேற்று இணைய கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
(रिलीज़ आईडी: 1665453)
आगंतुक पटल : 202