நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

2020-21-ம் ஆண்டு காரீப் சந்தை பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை செயல்பாடுகள்

Posted On: 16 OCT 2020 6:07PM by PIB Chennai

2020-21-ம் ஆண்டுக்கான காரீப் சந்தை பருவத்தின் வருகை ஏற்கனவே தொடங்கி விட்டது. முந்தைய பருவகாலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல ஏற்கனவே இருக்கும் குறைந்த பட்ச ஆதார விலை திட்டத்தின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21-க்கான காரீப் பயிர் அறுவடை மீதான கொள்முதலை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பஞ்சாப், ஹரியானா, உ.பி., தமிழ்நாடு, உத்தரகாண்ட், சண்டிகர், கேரளா மற்றும் ஜம்மு& காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6.09 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நடைபெற்றுவரும் 2020-21 காரீப் சந்தைப் பருவத்தில் கடந்த 15.10.2020 வரை 69.53 லட்சத்துக்கும் அதிகமான மெட்ரிக் டன் நெல்லை, இந்திய உணவு கழகம் உட்பட அரசின் இதர கொள்முதல் முகமைகளும் கொள்முதல் செய்துள்ளன. மொத்த குறைந்த பட்ச ஆதார விலையாக இது வரை ரூ.13,12,812 கோடி தரப்பட்டுள்ளது.

மாநிலங்களில் இருந்து வந்த பரிந்துரைகளின் அடிப்படையில், 2020 காரீப் சந்தைப் பருவத்துக்கு எண்ணைய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் 41.67 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்வதற்கு ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ் நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665200

**********************



(Release ID: 1665307) Visitor Counter : 141