பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத்தின் மின்னணு மற்றும் இயந்திரப் பொறியாளர் பிரிவின் 78-வது நிறுவன தின கொண்டாட்டம்

Posted On: 15 OCT 2020 5:11PM by PIB Chennai

தனது 78-வது நிறுவன தினத்தை 2020 அக்டோபர் 15 அன்று கொண்டாடிய மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர் படைப்பிரிவு, இந்திய ராணுவத்தின் உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளுக்கு பொறியியல் ஆதரவு அளிப்பதை கடமையாகக் கொண்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் சக்தியை முழுமையாக பயன்படுத்தி ராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களின் வடிவமைப்பு முதல் இறுதி பயன்பாடு வரை முழு பொறியியல் ஆதரவையும் இந்த பிரிவு அளிக்கிறது.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது வெண்டிலேட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை இந்த பிரிவு உறுதி செய்து தனது திறமையை நிரூபித்தது

சாகச விளையாட்டுக்களிலும் தனது முத்திரையை மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர் பிரிவு பதித்துள்ளது. மில்கா சிங், கர்னல் ஜே கே பஜாஜ், லெப்டினன்ட் கர்னல் விஷால் அலாவாத் ஆகியோர் இத்தகைய போட்டிகளில் வெற்றி வாகை சூடி உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664806


(Release ID: 1665026) Visitor Counter : 135