மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

'கபிலா' கலாம் என்னும் அறிவுசார் சொத்துரிமை குறித்த திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்

Posted On: 15 OCT 2020 7:32PM by PIB Chennai

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான  டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 89ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 'கபிலா' கலாம் என்னும் அறிவுசார் சொத்துரிமை குறித்தத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதுடன், அவற்றை காப்புரிமை செய்வதும் அவசியம் என்று வலியுறுத்தினார். முறையாகக் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகள் இந்தியாவைத்  தற்சார்பு அடையச் செய்யும் என்று அவர் தெரிவித்தார். நம் நாட்டில் போதிய திறன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அவற்றிற்கு காப்புரிமை பெற வேண்டும் என்று கூறினார். கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களின் உதவியுடன்    புதிய கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664883

**********************



(Release ID: 1664953) Visitor Counter : 207