சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஆந்திர பிரதேசத்தில் 16 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்தியமைச்சர் திரு. நிதின் கட்கரி நாளை அடிக்கல்

Posted On: 15 OCT 2020 4:31PM by PIB Chennai

ஆந்திர பிரதேசத்தின் 16 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி நாளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.  இத்திட்டங்களில் கீழ், ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மொத்தம் 1411 கி.மீ  தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் ரூ.15,592 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர பிரதேச முதல்வர் திரு.ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமை தாங்குகிறார்.  மத்திய இணை அமைச்சர்கள் டாக்டர் வி.கே.சிங் மற்றும் திரு கிஷன் ரெட்டி  மற்றும் ஆந்திர பிரதேச அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மத்திய, மாநில  அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664791

**********************


(Release ID: 1664818)