விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளின் நலனை பாதுகாக்க இந்திய அரசு என்றும் உறுதி பூண்டுள்ளது; வேளாண் செயலாளர் பஞ்சாபில் உள்ள 29 விவசாய சங்கங்களோடு கூட்டம் நடத்தினார்

प्रविष्टि तिथि: 14 OCT 2020 8:02PM by PIB Chennai

இந்திய அரசின் முக்கிய முன்னுரிமையாக விவசாயம் எப்போதும் திகழ்கிறது. பஞ்சாபில் சமீபத்தில் நடந்த போராட்டங்களோடு தொடர்புடைய 29 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்திய அரசின் வேளாண் (வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்) செயலாளர் அளவில் இந்த கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

பஞ்சாபில் உள்ள மேற்கண்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். வேளாண் செயலாளருடன் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு விவாசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.   

கூட்டத்தின் இறுதியில் செயலாளரிடம் இரண்டு மனுக்கள் விவசாய சங்கங்களின் சார்பாக வழங்கப்பட்டன. விவசாயிகளின் நலனை பாதுகாக்க இந்திய அரசு என்றும் உறுதி பூண்டுள்ளது; பேச்சுவார்த்தைகளுக்கு தயராகவே உள்ளது. 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664517

*********

 


(रिलीज़ आईडी: 1664652) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu