புவி அறிவியல் அமைச்சகம்

காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் அதி நவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்கு இந்திய வானிலை துறை செயல்படுத்தியது

Posted On: 14 OCT 2020 3:01PM by PIB Chennai

காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் முறைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்றங்களை புவி அறிவியல் அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் அதி நவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்காக இந்திய வானிலை துறை செயல்படுத்தியுள்ளது.

சிலாம் (SILAM) எனப்படும் காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் ஒருங்கிணைந்த அமைப்பு தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. என்ப்யூசர் 
(ENFUSER) என்னும் மிக அதிக திறன் வாய்ந்த, மாநகரத்துக்கான அளவிடும் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பின்லாந்து வானிலை நிறுவனத்துடன் இணைந்து சிலாம் மற்றும் என்ப்யூசர் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரு அமைப்புகளின் துணை கொண்டு காற்றின் தரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்து மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

காற்றின் தரத்தை குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ளும் உபகரணங்கள்   https://ews.tropmet.res.in/  மற்றும்  https://mausam.imd.gov.in. ஆகிய தளங்களில் கிடைக்கின்றன.


மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664312

*********

(Release ID: 1664312)

 



(Release ID: 1664644) Visitor Counter : 195