சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மக்கள் பிரசார இயக்கம் மற்றும் கொவிட்டுக்கு ஏற்ற நடவடிக்கை குறித்து எய்ம்ஸ் மற்றும் மத்திய அரசு மருத்துவமனை தலைவர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை
Posted On:
14 OCT 2020 6:50PM by PIB Chennai
கொவிட்டுக்கு ஏற்ற நடவடிக்கைகள் குறித்து மக்கள் பிரச்சார இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எய்ம்ஸ் மற்றும் மத்திய அரசு மருத்துவமனை தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், ‘‘ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 10வது மாதத்துக்குள் நாம் நுழைந்துள்ளோம். இன்று, நாம் 90 லட்சம் படுக்கைகள், 12 ஆயிரம் தனிமை மையங்கள், 1900 பரிசோதனை கூடங்கள் என வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை நாம் பெருமையுடன் கூற முடியும்” என்றார். அர்ப்பணிப்புடன் பாடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மற்றவர்களை காப்பாற்ற, தங்கள் உயிரை தியாகம் செய்த முன்னணி பணியாளர்களுக்கும் அவர் இரங்கல் தெரிவித்தார்.
‘‘குளிர் காலம் தொடங்கவுள்ளதாலும், பண்டிகை காலங்கள் வருவதாலும், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த 2 மாதங்கள் மிக முக்கியமானதாக இருக்கும்’’ என டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
கொவிட்டுக்கு ஏற்ற நடவடிக்கைகளை பின்பற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ள மக்கள் பிரசார இயக்கத்தை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையாக பாதித்துள்ளது எனவும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற எளிமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவலை நாம் தடுக்க முடியும் என்றும், இந்த ‘சமூக தடுப்பு முறைக்கு’ மருத்துவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664448
**********************
(Release ID: 1664581)
Visitor Counter : 244