மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

அக்குவாபோனிக்ஸ் மற்றும் இதர மாற்று வேளாண் தொழில்நுட்பங்களால் விவசாயிகளின் உற்பத்தியையும் வருமானத்தையும் அதிகரிக்கலாம்: திரு சஞ்சய் தோத்ரே

प्रविष्टि तिथि: 13 OCT 2020 6:36PM by PIB Chennai

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அக்குவாபோனிக்ஸ் மற்றும் இதர மாற்று வேளாண் தொழில்நுட்பங்கள் அவசியம். இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயிகள், தங்கள் விளை நில பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதுடன், அவர்களது வருமானத்தையும் பெருக்க முடியும் என்று மத்திய கல்வி, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார். லூதியானாவில் உள்ள குரு அங்கத் தேவ் கால்நடை பல்கலைக்கழகத்தில் மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையமான சி-டாக் தயாரித்துள்ள அக்குவாபோனிக்ஸ் தொழில்நுட்பத்தை அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இந்த அக்குவாபோனிக்ஸ் தொழில்நுட்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அக்குவாபோனிக்ஸ் என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மூலம் மீன்களும் தாவரங்களும் இணைந்து வளர்ச்சியடைகின்றன. வளரும் தாவரங்களுக்கு மீன்களின் கழிவுகள் உரமாகப் பயன்படுகிறது. இந்தக் கழிவுகளில் இருந்து தாவரங்களுக்குக் கிடைக்கும் ஊட்டச் சத்தை அவை தக்க வைத்துக் கொண்டு தண்ணீரை சுத்திகரிக்கிறது. இந்த தண்ணீர் மீன் தொட்டிகளை நிரப்பப் பயன்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664061

**********************


(रिलीज़ आईडी: 1664169) आगंतुक पटल : 275
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Marathi , Telugu